சிரியாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா: கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்
சிரியாவில் ரஷ்ய வான் படை நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரிய கிளர்ச்சியாளர்கள் படையெடுப்பு
சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்துக்கு எதிராக சிரிய கிளர்ச்சியாளர்கள் படையெடுப்பை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலை தொடங்கிய 3 நாட்களிலேயே ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படை அலெப்போ நகருக்குள் நுழைந்து பெரும்பாலான பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சிரிய ராணுவம் தொடர்ந்து பின்வாங்கி வருவதால் சிரிய கிளர்ச்சியாளர்கள் படைகள் ஹமாவிற்குள் நுழைந்து இருப்பதுடன் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் முன்னேறியுள்ளனர்.
சிரிய கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கு எதிராக சிரிய ராணுவமும், ரஷ்ய விமான படையும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள்
இந்நிலையில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய படைகளுக்கு ஆதரவாக அலெப்போவில் ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஊடகங்கள் வழங்கிய தகவலில், கிளர்ச்சியாளர்கள் கூடும் இடங்களில் ரஷ்யா வான் தாக்குதலை நடத்தி வருவதாகவும், இந்த தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட சிரிய கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் சிரிய கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரில் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |