திணறடித்த பனிபுயல்! சிலியில் பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழப்பு
சிலி நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய சுற்றுலா பயணி உயிரிழப்பு
சிலி நாட்டின் படகோனியா(Patagonia) பிராந்தியத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவருடன் சேர்த்து மொத்தம் 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்து இருப்பதைக் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த 5 பேரின் உடல்களும் செவ்வாய்க்கிழமை சிலி நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான டோரஸ் டெல் பெயின்(Torres Del Paine) தேசிய பூங்காவிற்குள் மீட்கப்பட்டன.
பிராந்திய ஜனாதிபதி பிரதிநிதி ஜோஸ் அண்டோனியோ ரூயிஸ் வழங்கிய தகவலில், உயிரிழந்த 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 1 பிரித்தானியர், 2 ஜேர்மனியர்கள் மற்றும் 2 மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக தீவிர தேடல் மற்றும் மீட்பு பணிகளின் காரணமாக 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |