பிரித்தானிய மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்... சீனா விமர்சனம்
பிரித்தானியா குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் மோசமாக விமர்சித்துள்ளது.
பிரித்தானிய மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்
கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் வறுமையில் வாடும் மக்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குற்றச்செயல்களின் வீதம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
எதனால் இந்த விமர்சனம்?
விடயம் என்னவென்றால், சீனாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஹொங்ஹொங் குறித்து பிரித்தானியா ஆறு மாத அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீனா அறிமுகம் செய்த தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதற்காக பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுக்கவே, சீனா பிரித்தானியாவை விமர்சித்துள்ளது. பிரித்தானியாவில் வறுமையில் வாடும் மக்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, குற்றச்செயல்களின் வீதம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரித்தானியா எப்படி ஹொங்ஹொங்கின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து விமர்சிக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளது சீன வெளியுறவு அமைச்சகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |