புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள்
அதிகரித்து வரும் ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், ஐரோப்பியப் படைகளுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்த்துப் போராட பிரித்தானிய துருப்புக்களும் களமிறங்க உள்ளது.
பாதுகாப்பு ஒப்பந்தம்
பிரஸ்ஸல்ஸுடனான ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கசிந்த ஆவணங்களின் அடிப்படையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த வாரம் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்தை வெளியிடத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2020ல் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதிலிருந்து, பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீவிரமான ஒரு இராணுவ ஒப்பந்தத்திற்குக் கொண்டுவருகிறது.
இந்த ஒப்பந்தமானது பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான பாதுகாப்புக் கொள்கையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான பணிகளில் பங்கேற்க வாய்ப்பாக அமைகிறது.
மேலும், உக்ரைனில் விளாடிமிர் புடினின் போர் மற்றும் ஐரோப்பிய கண்டம் முழுவதும் உளவு பார்த்தல் மற்றும் நாசவேலை தீவிரமடையும் நிலையிலேயே பிரித்தானியா இந்த முடிவுக்கு வந்துள்ளது.
நேட்டோவிற்கு வெளியே
அத்துடன் இந்த ஒப்பந்தம் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவிற்கு வெளியே இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளையும் வகுக்கிறது.
வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், இந்த ஒப்பந்தம் சில மாதங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளில் பிரித்தானிய இராணுவம் இணைத்துக்கொள்ளும் என்றே தெரிய வருகிறது.
மேலும், இந்த இராணுவ ஒத்துழைப்பு தீவிரமடைந்து வருகின்ற போதிலும், பிரித்தானியாவின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 127 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஆயுதங்களுக்கான நிதியை தானாகவே அணுக அனுமதி வழங்கப்படாது.
அதற்கு பதிலாக, மேலும் பேச்சுவார்த்தைகள் மற்றும் சாத்தியமான நிதி பங்களிப்புகளைப் பொறுத்து பிரித்தானியாவிற்கு அனுமதி அளிக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |