சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பிரித்தானிய படகை விடவேண்டுமானால் 125,000 பவுண்டுகள் கொடுக்கவேண்டும்... பிரான்ஸ் தடாலடி
பிரான்ஸ் சிறைப்பிடித்து வைத்துள்ள பிரித்தானிய மீன்பிடி படகை விடுவிக்கவேண்டுமானால் 125,000 பவுண்டுகள் டெபாஸிட் செய்யவேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து, பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான மீன்பிடித்தல் பிரச்சினை பெரிதாகிக்கொண்டே செல்லும் நிலையில், பிரித்தானிய மீன்பிடி படகு ஒன்றை பிரான்ஸ் சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Cornelis Gert Jan என்று அழைக்கப்படும் அந்த படகு இப்போதும் பிரான்சிலுள்ள, Normandy என்னும் இடத்திலுள்ள Le Havre துறைமுகத்தில்தான் உள்ளது.
அந்த படகை விடுவிக்கவேண்டுமானால், படகின் உரிமையாளர்கள் 125,000 பவுண்டுகள் டெபாஸிட் செய்தாகவேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் கூறிவிட்டார்கள்.
அந்த படகு மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் கூட, அவ்வளவு பெரிய தொகையை அது சம்பாதித்திருக்க முடியாது என்பது பரிதாபமான ஒரு உண்மையாகும்.
அதுமட்டுமின்றி, படகின் உரிமையாளர்கள் மீது அடுத்த ஆண்டு கிரிமினல் வழக்கு தொடர இருப்பதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் 70,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக அபராதம் செலுத்தவேண்டியிருக்கும் என்றும் பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.