வெளிநாடொன்றில் மலையேற்றத்துக்குச் சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானியப் பெண்ணொருவர் வெளிநாடொன்றில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், 500 மீற்றர் உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மலையேற்றத்துக்குச் சென்ற பிரித்தானிய பெண்
சனிக்கிழமையன்று, ஸ்பெயின், பிரான்ஸ் எல்லையிலுள்ள Pyrenees மலைப்பகுதியில் மலையேற்றத்துக்குச் சென்ற 42 வயதுள்ள பிரித்தானிய பெண்ணொருவரும், 53 வயதுள்ள ஆண் ஒருவரும் மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது, அந்தப் பெண் 500 மீற்றர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில், உள்ளூர் நேரப்படி அவர் மாலை 7.30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானியக் குடிமகளான அவர் பின்லாந்தில் வாழ்ந்துவந்துள்ளார்.
பிரித்தானிய வெளியுறவு அலுவலக அதிகாரிகள், பிரித்தானியக் குடிமகள் ஒருவர் துயர மரணமடைந்தது குறித்து தங்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும், ஸ்பெயின் அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அந்தப் பெண்ணின் மரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றையும் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |