சவுதி மாணவரை கொலை செய்த பிரித்தானியருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரித்தானியாவில் சவுதி மாணவரை குத்திக் கொலை செய்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி குடிமகன் கொலை
கடந்த ஆண்டு கேம்பிரிட்ஜில் ஆங்கிலம் படித்து வந்த சவுதி குடிமகனான முகமது அல்-காசிம் (20) படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, சாஸ் கோரிகன் (22) என்ற பிரித்தானியர் கைது செய்யப்பட்டார்.
கொலைக் குற்றத்தை அவர் மறுத்தாலும், விசாரணையின்போது கத்தி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.
22 ஆண்டுகள் சிறை தண்டனை
ஆனால், அல்-காசிமைக் காயப்படுத்துவதை விட அவரைப் பயமுறுத்தும் நோக்கிலேயே அந்த ஆயுதத்தை அசைத்ததாக நடுவர் குழுவிடம் கூறினார்.

இந்த நிலையில், கோரிகனுக்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது சொந்தப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்ததாக அவர் முன்வைத்த வாதங்கள் நிராகரிக்கப்பட்டன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |