நடுவானில் விமானத்தில் சுயநினைவிழந்த பிரித்தானியர்: கிடைத்துள்ள துயரச் செய்தி
தன் தாயுடன் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பிரித்தானியர் ஒருவர் திடீரென சுயநினைவிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக செய்தி கிடைத்துள்ளது.
சுற்றுலா சென்ற தாயும் மகனும்
அந்த 29 வயது பிரித்தானியர், தன் தாயுடன் கரீபியன் தீவுகளில் ஒன்றான Antigua தீவுக்கு சுற்றுலா செல்லும்போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வியாழனன்று தாயும் மகனும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, நடுவானில் திடீரென சுயநினைவிழந்துள்ளார் அந்த இளைஞர்.
Credit: Getty
விமானம் Antiguaவில் தரையிறங்கவும், தயாராக நின்ற மருத்துவ உதவிக்குழுவினர் மருத்துவமனை ஒன்றிற்கு அவரைக் கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
Credit: Getty
தாய் கூறியுள்ள தகவல்கள்
இந்நிலையில், அந்த இளைஞருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், மரபியல் தசைக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் முதலான பல பிரச்சினைகள் இருந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
Credit: AFP
இதற்கு முன்பும் பலமுறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |