வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு குற்றங்களில் குற்றவாளி... சதி வலையில் பிரித்தானியா கோடீஸ்வரர்
ஹொங்ஹொங்கில் தேசிய பாதுகாப்பு குற்றங்களுக்காக பிரித்தானியக் குடிமகனும் கோடீஸ்வரருமான ஜிம்மி லாய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு சக்திகளுடன் சதி
ஹொங்ஹொங்கில் நடந்த பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து சீனா தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்ததை அடுத்து, ஊடக நிறுவனரும் பிரித்தானியக் குடிமகனுமான 78 வயது ஜிம்மி லாய் ஆகஸ்ட் 2020 இல் கைது செய்யப்பட்டார்.

ஜிம்மி லாய் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருந்தபோது பல சிறிய குற்றங்களுக்காக முன்னர் தண்டனை அனுபவித்திருந்தார். தற்போது செயற்பாட்டில் இல்லாத ஜனநாயக சார்பு செய்தித்தாளான ஆப்பிள் டெய்லியை நிறுவிய லாய் மீது,
தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சதி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும், தேசத்துரோக வெளியீடுகளை விநியோகிக்க சதி செய்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சீன அரசாங்கத்தை வீழ்த்த உதவுமாறு லாய் அமெரிக்காவிற்கு தொடர்ச்சியான கோரிக்கைகளை விடுத்ததாகவும், அமெரிக்கா எந்த வகையான செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக முயற்சிகளை முன்னெடுத்ததாகவும் ஆதாரங்களில் அம்பலமாகியுள்ளதாக நீதிபதி எஸ்தர் டோ தீர்ப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

லாயின் நோக்கம்
மேலும், லாய் தான் சதித்திட்டங்களின் மூளையாக செயல்பட்டவர் என்றும், சீனா மற்றும் ஹொங்ஹொங் மக்களை தியாகம் செய்தும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கு பாடுபடுவதே லாயின் நோக்கம் என்பதுதான் ஆதாரங்களிலிருந்து கிடைத்த ஒரே நியாயமான முடிவு என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லாய் 1,800 நாட்களுக்கும் மேலாக தனிமைச் சிறையில் கழித்துள்ளார். இதன் விளைவாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றால் அவதிப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், 800 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், அவரை குற்றவாளியாக்க எதுவும் இல்லை. அவர்களுடைய சொந்த சட்ட அமைப்பின் கீழ் கூட அவரை குற்றவாளியாக்க எதுவும் இல்லை என அவரது மகன் செபாஸ்டியன் லாய் தெரிவித்துள்ளார்.
லாய் விவகாரத்தில் பிரித்தானியா உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவரது மகன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகம் தீர்ப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ஸ்டார்மரின் உத்தியோகப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜிம்மி லாயின் விடுதலை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான அணுகலுக்காக அவரது தண்டனைக்கு முன்னதாக சீன அரசாங்கத்திடம் நாங்கள் தொடர்ந்து மேல்முறையீடு செய்வோம் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |