விமான நிலையங்களில் இனி பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யவேண்டியதில்லை
British people to travel through UK airports without scanning passports in new rules: பிரித்தானிய விமான நிலையங்கள் சிலவற்றின் வழியாக பயணிக்கும் பிரித்தானியர்கள் இனி தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யத் தேவையில்லை.
பிரித்தானியர்கள் சில விமான நிலையங்களில், தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யவேண்டியதில்லை என்னும் வகையில் புதிய விதிகள் அறிமுகமாக உள்ளன.
புதிய விதிகள்
வெளிநாடு சென்று விட்டு பிரித்தானியா திரும்பும் பிரித்தானியர்கள், விமான நிலையங்களில் மின்னணு கதவுகளில் தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், பர்மிங்காம் மற்றும் East Midlands விமான நிலையங்களில், மக்கள் இனி தங்கள் பாஸ்போர்ட்டை மின்னணு கதவுகளில் ஸ்கேன் செய்வதற்காக காத்திருக்கவேண்டாம்.
அதற்கு பதிலாக, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து, தானாகவே அதை உங்கள் பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும் புதிய அமைப்பு ஒன்று அறிமுகமாக உள்ளது.
இன்னும் சில வாரங்களில் இந்த புதிய அமைப்பு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணு கதவுகளில் ஸ்கேன் செய்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் இப்போதைய முறையில் தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யவேண்டியிருக்கும்.