நாவூறும் சுவையில் பிரியாணி கத்திரிக்காய் கிரேவி.., எப்படி செய்வது?
பிரியாணிக்கு கத்தரிக்காய் கிரேவி இல்லையெனில் அந்த உணவு முழுமைப் பெறாது.
என்னதான் ருசியான பிரியாணியாக இருந்தாலும் தொட்டுக்கொள்ள இந்த கத்தரிக்காய் தொக்குதான் அதன் கூடுதல் சுவையே.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பிரியாணி கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை- 20
- சோம்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- எள்ளு- ¼ ஸ்பூன்
- வெந்தயம்- ¼ ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- கத்திரிக்காய்- 5
- கடுகு- ½ ஸ்பூன்
- உளுந்து- ½ ஸ்பூன்
- வெங்காயம்- 2
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- தக்காளி- 2
- புளி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் வேர்க்கடலை, சோம்பு, சீரகம், எள்ளு மற்றும் வெந்தயம் சேர்த்து வறுத்து ஆறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து கழுவி சுத்தம் செய்து வைத்த கத்திரிக்காயை 3 நிமிடம் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே எண்ணெயில் கடுகு, உளுந்து, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து வதக்கி கறிவேப்பிலை மற்றும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு வதக்கி இறுதியாக இதில் புளி தண்ணீர் சேர்த்து கெட்டியாகி வருவரை கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதில் வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து கிளறி 5 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான பிரியாணி கத்திரிக்காய் கிரேவி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |