3500 கோடியில் தங்க ஜெட் விமானம், 7000 கார்கள் வைத்திருக்கும் நபர் யார் தெரியுமா?
புருனே சுல்தான் ஹஸனல் போல்கியா ஆடம்பர வாழ்க்கை குறித்த பதிவை இங்கே காண்போம்.
ஹஸனல் போல்கியா
தென்கிழக்கு ஆசியாவின் குட்டி தேசம் புருனே. இந்நாட்டின் பிரதமராகவும், சுல்தானாகவும் இருப்பவர் ஹஸனல் போல்கியா (Hassanal Bolkiah). 78 வயதாகும் இவர் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
இவரது பாரிய மூலதனம் பெரும்பாலும் புருனேயின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளில் இருந்து பெறப்படுகிறது.
ஹஸனல் போல்கியா உலகின் மிகப்பெரிய தனிநபர் கார் கலெக்ஷனை வைத்துள்ளார். அதாவது, இவர் 7000 சொகுசு கார்களை வைத்துள்ளார்.
அவற்றில் 600 கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் ஆகும். இவற்றின் மதிப்பு சுமார் 5 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இவரது சொத்து மதிப்பு 30 பில்லியன் டொலர்கள் என்று கூறப்படுகிறது.
தங்க முலாம் பூசப்பட்ட ஜெட் விமானம்
பந்தர் செரி பேகவன் நகரில் ஹஸனல் போல்கியா வைத்திருக்கும் அரண்மனையின் மதிப்பு 1.5 பில்லியன் டொலர்கள் ஆகும். இதில் மொத்தம் 1,700 அறைகள் உள்ளன.
அதேபோல் புருனே சுல்தான் தங்க முலாம் பூசப்பட்ட போயிங் 747-400 என்ற ஜெட் விமானத்தையும் வைத்துள்ளார்.
இது உலகின் மிகவும் ஆடம்பரமான தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது பறக்கும் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் தனியாக வனவிலங்கு சரணாலயத்தையும் சுல்தான் வைத்திருக்கிறார். இங்கு 30 பெங்கால் புலிகள் உட்பட பல விலங்குகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |