830 மைல் எல்லை... ரஷ்யாவுடன் முழு வீச்சிலான போருக்கு தயாராகும் ஐரோப்பிய நாடு
ரஷ்யாவுடனான பின்லாந்தின் 830 மைல் எல்லை தொடர்பில் எழுந்துள்ள கவலையால் அந்த நாடு முழு அளவிலான போருக்கு தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போர் ஒத்திகையில்
பின்லாந்துக்கு ஆதரவாக இப்பகுதியில் ஆயிரக்கணக்கான நேட்டோ வீரர்கள் பலமுறை போர் ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர். ஆனால், கொடூரமான ஆர்க்டிக் போரில் நேட்டோ வீரர்கள் தாக்குப்பிடிப்பது கடினம் என்றே நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
பின்லாந்துக்கு ஆதரவாக நேட்டோ வீரர்கள் களமிறங்கினாலும், அவர்கள் போரில் ஈடுபடுவதற்கு முன்பே ஆர்க்டிக்கில் எப்படி உயிர் தப்புவது என்று அவர்களுக்குத் தெரியுமா என நிபுணர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்லாந்து மட்டுமின்றி, நேட்டோ உறுப்பு நாடுகள் பல ஆர்க்டிக் சூழலை எதிர்கொள்ளும் திறன்கொண்டவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொத்தமாக பனி மூடப்பட்டுள்ள பிரதேசத்தில் ஆயுதங்களை வரவழைத்துக் கொள்வது என்பது சவால்களின் உச்சம் என்கிறார் ஒரு நிபுணர்.
உயிர் உறையும் வெப்பநிலை, மிக மோசமான காலநிலை, இயற்கையின் கொடூரத்தை ஆர்க்டிக் பகுதியில் உணரலாம் என்றார். 830 மைல்கள் எல்லையில் இருந்து ரஷ்யாவை விரட்டுவதன் முக்கியத்துவத்தை பின்லாந்து நன்கு தெரிந்து வைத்திருக்கிறது.
1939ல் நடந்த குளிர்காலப் போரில், கொடிய படைகள் 200,000 சோவியத் ரஷ்ய துருப்புக்களைக் கொன்றன. இந்த நிலையில், 1991ல் சோவியத் ஒன்றியம் சிதைந்ததன் பின்னர் எப்போது வேண்டுமானாலும் போருக்கு தயாராகவே பின்லாந்தின் நிலை இருந்துள்ளது.
மேலும், 2022ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னரே பின்லாந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றது. இதனால், பின்லாந்துக்கு இன்னொரு நாடு காரணமாக அச்சுறுத்தல் என்றால் நேட்டோ உறுப்பு நாடுகள் களமிறங்க வேண்டும்.
சுற்றிவளைக்கப்படலாம்
ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 21,000 வீரர்களை பின்லாந்து போருக்கு தயார் படுத்தி வந்துள்ளது. 285,000 வீரர்கள் இக்கட்டான நேரத்தில் பயன்படுத்தும் வகையில் தயாராக உள்ளனர். பின்லாந்தின் மீது ரஷ்யா படையெடுக்கும் என்றால், ரஷ்யாவை விரட்டியடிப்பதே முதன்மையான இலக்காக கொண்டுள்ளனர்.
மேலும், பிரித்தானியா மற்றும் அமெரிக்க இராணுவம் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது. ஆனால், ஆர்க்டிக் போரில் தாம் சுற்றிவளைக்கப்படலாம் என்ற அச்சத்தில் ரஷ்யா தயங்கி வருவதாகவே கூறப்படுகிறது.
ஆர்க்டிக் வட்டத்தில் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், கனடா, அமெரிக்கா, ஐஸ்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இணைந்த பிறகு, ரஷ்யாவைத் தவிர அனைத்து ஆர்க்டிக் நாடுகளும் தற்போது நேட்டோவின் ஒரு பகுதியாக உள்ளன.
மட்டுமின்றி, பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நகர்வுகளை கவனித்துவரும் புடின் போருக்கான ஆதாரமாக பார்க்கிறார். அத்துடன் பிராந்தியத்தில் இராணுவ மோதலுக்கும் அவர் திட்டமிட்டுள்ளார் என்றே நிபுணர்கள் தரப்பின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |