அம்பானிக்கு போட்டியாக வந்தாச்சு BSNL-ன் அதிரடி ஆஃபர்! மாதம் 4,000 GB டேட்டா
பி.எஸ்.என்.எல் தனது பயனாளர்களுக்கு தினசரி வரம்பு இல்லா டேட்டா வழங்கும் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
BSNL Broadband Plan
தற்போது, நாட்டில் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் பல போட்டியும் நிலவி வருகிறது. அந்த நிறுவனங்கள் புதிய ஆஃபர்களையும், புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. அதாவது, புதிய ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களை பயனாளர்களுக்காக கொண்டு வருகின்றன.
சாதாரணமாகவே மக்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி, 2 ஜிபி டேட்டா வரையும் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு குறைவான டேட்டா பிளான் போதுமானது. ஆனால், அதிகமாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கோ, ஓன்லைனில் வேலை செய்யும் நபருக்கோ அதிக டேட்டா தேவைப்படுகிறது. அவர்களுக்கு இந்த பிளான் பயனுள்ளதாக இருக்கும்.
நாட்டின் பழமை வாய்ந்த பிராட்பேண்ட் நிறுவனத்தில் ஒன்று பி.எஸ்.என்.எல் ஆகும். தினசரி வரம்பு இல்லாமல் இணைய டேட்டா வழங்கும் பிராட்பேண்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் தற்போது கொண்டு வந்துள்ளது.
இந்த பிளானில் இருக்கும் சலுகைகள்
BSNL-ன் பிராட்பேண்ட் இணைப்பை 300MBPS வேகத்தில் இந்த திட்டத்தை நீங்கள் எடுத்தால், உங்களுக்கு மிகச்சிறந்த இணையசேவை கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல், இந்த ரீசார்ஜ் திட்டமானது உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும். டேட்டாவை பற்றி கவலை பட தேவையில்லை. குறைவான விலையில் இந்த பிளானை பெறுவது தான் இதில் இருக்கும் முக்கியமான சலுகையாகும்.
BSNL-ன் 300 sbps வேகத்தில் இந்த திட்டத்தை நீங்கள் எடுத்தால், உங்களுக்கு மாதம் தோறும் 4 ஆயிரம் GB டேட்டா கிடைக்கும். அதவாது 4 TB டேட்டா கிடைக்கும். பயனாளர்களுக்கு வழங்கும் இந்த திட்டத்திற்கு Fiber Ultra OTT என பெயரிட்டுள்ளது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்பட்டுள்ளது.
OTT இணையதளங்களான, Disney Hoster, Semaromi, Liongate, SonyLIV, Hungama, YuppTV மற்றும் G5 ஆகியவற்றின் இலவச சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்திற்காக மாதம் ரூ 1,799 விதிக்கப்பட்டுள்ளது.
BSNL-ன் பிராட்பேண்ட் திட்டத்தை நீங்கள் பெற்றால் பல நன்மைகளும், சலுகைகளும் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |