ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு! உக்ரேனிய மேயர் கொந்தளிப்பு
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக ரஷ்யா தெரிவித்த நிலையில், உக்ரைன் மீது இரவுநேர தாக்குதல்களை நடத்துவதாக புச்சா மேயர் கடிந்துள்ளார்.
எதிர்ப்பு தெரிவித்த புடின்
உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்திக்க விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த புடின், ஜனாதிபதி ட்ரம்புடன் மட்டுமே சந்திப்பு என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா இரவுநேர தாக்குதல்களை தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதாவது கீவ் பகுதியில் உள்ள புச்சா (Bucha) நகரத்தின் மீது ரஷ்யா பாரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஒரு மழலையர் பாடசாலை, 7 தனியார் வீடுகள் சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் நகர மேயர் Anatolii Fedoruk தெரிவித்துள்ளார்.
நகர மேயர் கொந்தளிப்பு
இதுதொடர்பாக கட்டமாக பேசிய அவர், "எங்கள் சமூகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியின் மீது ரஷ்ய பயங்கரவாத தாக்குதலின் விளைவாக எங்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளது. இது ஒரு பாரிய தாக்குதல். வான் பாதுகாப்பு படைகள் நன்றாக வேலை செய்தன.
அனைத்து மக்களும் உயிருடன் உள்ளனர். ரஷ்யா இரவில் எங்கள் குடியிருப்புகளின் பொதுமக்கள் வீட்டு உள்கட்டமைப்பை நயவஞ்சகமாக தாக்குவதை நாங்கள் மீண்டும் ஒருமுறை கண்டிருக்கிறோம்.
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு. இந்த மொத்த உலகமும் இதனை அறிந்துகொள்ள வேண்டும். உக்ரைனியர்களுக்கு எதிரான கொலைகள் மற்றும் அட்டூழியங்களை புரிந்துகொண்டு, எந்த நாடும் ரஷ்யா உடன் கை குலுக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |