டிரக்கில் மரக்கட்டைகளுக்குள் ஒளிந்திருந்த புலம்பெயர்ந்தோர்., மூச்சடைத்து 18 பேர் மரணம்
பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் 18 புலம்பெயர்ந்தோர் இறந்து கிடப்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
18 புலம்பெயர்ந்தோர் மரணம்
பல்கேரியாவில் தலைநகர் சோபியா அருகே கைவிடப்பட்ட டிரக்கில் குறைந்தது 18 பேர் மூச்சடைத்து இறந்து கிடந்ததாக பல்கேரிய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை (பிப்.17) தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, டிரக் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்றது. அந்த டிரக்கீழ் மொத்தம் 40 பேர் மரக்கட்டைகளின் கீழ் மறைந்திருந்ததாக பல்கேரிய உள்துறை அமைச்சகம் கூறியது.
Representative Image RTE
ஆபத்தான நிலையில் 8 பேர்
உயிர் பிழைத்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அது கூறியது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பல்கேரியாவின் சுகாதார அவசர மையம் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
டிரக் டிரைவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க பொலிஸார் முயன்று வருகின்றனர்.