பாகிஸ்தானை நிலைகுலையவைத்த பர்கர்! மீண்டும் சொதப்பிய பாபர் அஸாம்
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்ட்ரே பர்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
நான்ட்ரே பர்கர்
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பைசலாபாத்தின் இக்பால் மைதானத்தில் நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்று பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. நான்ட்ரே பர்கரின் முதல் ஓவரின் 3வது பந்திலேயே ஃபஹர் ஜமான் டக்அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த பாபர் அஸாம் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பர்கரின் பந்துவீச்சில் ஃபெர்ரெய்ராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 
அதன் பின்னர் களமிறங்கிய மொஹம்மது ரிஸ்வான் 4 ஓட்டங்களில் பர்கரின் அதே ஓவரிலேயே போல்டு ஆனார்.
இதனால் பாகிஸ்தான் அணி 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |