நாட்டின் உயர் தலைவரின் புகைப்படம் எரிப்பு... 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு
நாட்டின் உயர் தலைவரின் புகைப்படத்தை எரித்து, காணொளியாக வெளியிட்ட 22 வயது இளைஞரின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக
அந்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஈரான் அரசு ஊடகமும் சமூக ஆர்வலர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசால் தடை செய்யப்பட்ட செய்தி இணைய பக்கத்திலேயே Omid Sarlak குறித்த தகவல் வெளியானது.

தலையில் துப்பாக்கி குண்டு பாயந்த காயங்களுடன் மேற்கு ஈரானின் ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை தனது காரிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது கைகளில் தோட்டாக்களைப் பயன்படுத்திய தடயங்களும் காணப்பட்டதாக அந்த இணைய பக்கத்தில் கூறப்பட்டது. Sarlak தற்கொலை செய்துகொண்டதாகவே ஈரானிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் Sarlak-ன் மரணம் தொடர்பில் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக அவர் வெளிப்படையான கருத்து தெரிவித்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது, அரசாங்கத்தால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Sarlak-ன் சடலம் மீட்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றில், இஸ்லாமியக் குடியரசின் தலைவர் அலி கமேனியின் புகைப்படத்தை எரிப்பது பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஆர்வலர்களின் கொந்தளிப்பு தற்போது அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களின் ஹீரோவாக மாறிய Sarlak, அவரைப் பின்பற்றி தற்போது பலர் அலி கமேனியின் புகைப்படத்தை எரித்து அதை சமூக ஊடகத்தில் காணொளியாக பதிவேற்றி வருகின்றனர்.

மேலும், Sarlak-ன் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இருந்து அவரது தந்தை கூறிய கருத்தும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர்கள் எனது சேம்பியனை இங்கேயே கொன்று விட்டார்கள் என Sarlak-ன் தந்தை கூற, பின்னணியில் அவரை சுற்றிவளைத்து கொன்றுவிட்டார்கள் என சத்தமாக கத்தும் குரலும் பதிவாகியுள்ளது.
உயிருக்கு ஆபத்து
ஆனால், துரிதமாக செயல்பட்ட ஈரானிய அரசாங்கம், Sarlak-ன் தந்தையை அரசு செய்தி ஊடகத்தில் பேச வைத்து, இந்த விவகாரத்தை முடக்கும் வேலையில் இறங்கியது. சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று Sarlak-ன் தந்தை வேண்டுகோள் விடுப்பதாக அரசு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது Sarlak-ன் குடும்பமும் அரசின் கண்காணிப்பில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர். திங்கட்கிழமை சர்லக்கின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Sarlak விமானப் போக்குவரத்து துறை மாணவராகவும், ஈரானிய மல்யுத்த வீரர் இப்ராஹிம் எஷாகியின் ரசிகராகவும் இருந்த ஒரு அமெச்சூர் குத்துச்சண்டை வீரர். இந்த நிலையில் இறப்பதற்கு சற்று முன்பு, Sarlak இன்ஸ்டாகிராமில் தன்னைத் தொடர்பு கொண்டதாக எஷாகி தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தனக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் Sarlak கேட்டுக்கொண்டதாக எஷாகி தெரிவித்துள்ளார்.
தற்போது ஜேர்மனியில் வசிக்கும் எஷாகி தெரிவிக்கையில், அவரது மரணத்திற்குப் பிறகு, சர்லக்கின் நெருங்கிய நண்பர்கள் பலர், அவர் உளவுத்துறையினரால் கொல்லப்பட்டதாக நம்புவதாகக் கூறினர் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |