பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து..8 பேர் பரிதாப பலி
இந்திய மாநிலம் உத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து விபத்து
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, கங்னானி அருகே பள்ளத்தாக்கில் விழுந்தது.
எதிர்பாராத இந்த விபத்தில் 8 பயணிகள் பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
jagran.com
பொலிஸார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கூடுதல் தலைமை செயலாளர் ராதா ரதுரிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சுமார் 50 மீற்றர் ஆழத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |