பேருந்தும் - எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து: துருக்கியில் பயங்கரம்
Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பேருந்து - எரிபொருள் லொறி விபத்து
மத்திய துருக்கியின் அனடோலியா பகுதியின் கைசேரி மாகாணத்தில் பேருந்தும் எரிபொருள் லொறியும் மோதிக் கொண்ட விபத்தில் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் முழுவீச்சில் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.

அதே சமயம் விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸாரும் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பேருந்தும் எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து தலைநகர் அங்காராவுக்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள தொழிற்துறை சாலையில் நடைபெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |