32 வாகனங்கள் மீது மோதிய பேருந்து... தென்கொரியாவில் பாரிய விபத்து
Bus hits 32 vehicles near Seoul, dozens injured: சியோல் நகருக்கு அருகில் நிகழ்ந்த விபத்தொன்றில் பேருந்து ஒன்று 32 வாகனங்கள் மீது மோதியதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளார்கள்.
தென்கொரிய தலைநகரான சியோல் நகருக்கு அருகில் நிகழ்ந்த விபத்தொன்றில், பேருந்து ஒன்று 32 வாகனங்கள் மீது மோதியதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளார்கள்.
32 வாகனங்கள் மீது மோதிய பேருந்து...
இன்று காலை, தென்கொரியாவிலுள்ள Seongnam என்னுமிடத்தில், பேருந்து ஒன்று அடுத்தடுத்து 32 வாகனங்கள் மீது மோதியுள்ளது.

Seongnam நகரம், தென்கொரிய தலைநகரான சியோலுக்கு தென்கிழக்கே அமைந்துள்ளது. அந்தப் பேருந்து, பல கார்கள், ஒரு ட்ரக் மற்றும் நான்கு பேருந்துகள் மீது மோதியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் 57 பேர் காயமடைந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்
அதே நேரத்தில், Yonhap என்னும் தென்கொரிய ஊடகம், 48 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
காலையிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தன் பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்று அவர் கூறியதாக Yonhap ஊடகம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.