5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்த தொழிலதிபர்! செந்தில் பாலாஜி விடுதலை கொண்டாட்டம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் தொழிலதிபர் ஒருவர் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரியாணி விருந்து
கரூர் மாவட்டம், செம்படாபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தோகை முருகன்.
இவர், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவந்ததை கொண்டாடும் விதமாக கரூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
இதையொட்டி, இன்று காலை முதல் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. இரவு வரை 5000 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பிரியாணி விருந்து நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியின் பதாகைக்கு பால் அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு பிரியாணி கொடுத்து விழாவை தொடங்கினர்.
இதற்காக, 750 கிலோ அரிசி, 1,500 கிலோ கோழிக்கறி, 5,000 முட்டைகள் என பிரியாணி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |