ஐபோனைவிட குறைவான விலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள்: எந்த நாட்டில் தெரியுமா?
ரஷ்யாவில், ஐபோனைவிட குறைவான விலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கிடைப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஐபோனைவிட குறைவான விலையில்...
ஆம், ரஷ்யாவிலுள்ள Vorkuta என்னும் நகரில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை 787 பவுண்டுகள்.
அதே நேரத்தில், ஐபோன் Pro Max மொடல், சுமார் 2,000 பவுண்டுகளுக்கு விற்கப்படுகிறதாம்.
Credit: Instagram/@sofia.mayans
சமூக ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் நிலையில், ஒரு இளம்பெண், நான் என் கையில் Vorkuta நகரிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வைத்திருக்கிறேன் என்று கூறும் இடுகை ஒன்று வெளியாகியுள்ளது. அவர் கையில் இருப்பது, ஒரு புதிய ஐபோன்! +
50,000 பேர் வாழும் நகரமான Vorkutaவில், ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஒரு ஐபோன் விலையை விட குறைவான விலையில் கிடைக்கின்றனவாம்.

அதாவது, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துள்ளதால், ரஷ்யப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஆகவேதான் வீடுகள் விலை ஐபோன் விலையை விட குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |