தூதரகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக் - பஹல்கம் தாக்குதலை கொண்டாடுகிறதா பாகிஸ்தான்?
பஹல்கம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக கருதும் இந்தியா, பாகிஸ்தான் உடனான அட்டாரி-வாகா எல்லையை மூடுதல், சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், பாகிஸ்தானியர்களுக்கான விசாவை தற்காலிகமாக ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூடுவதாகவும், அதில் உள்ள தூதரக அதிகாரிகள் மே 1 ஆம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக்
இதனையடுத்து, பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை இந்திய அரசு திரும்ப பெற்றது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தூதரகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து ஒரு நபர், கேக் ஒன்றை பாகிஸ்தான் தூதரகத்திற்கு உள்ளே எடுத்து சென்றார். யார் நீங்கள்? எதற்காக கேக் கொண்டு செல்கிறீர்கள், கொண்டாட்டத்திற்கா? என செய்தியாளர்கள் அவரை சுற்றி வளைத்து கேள்வி கேட்டனர்.
ஆனால் அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் கேக் உடன் உள்ளே சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், தூதரகத்திற்கு உள்ளே கேக் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம், பாகிஸ்தான் இந்த தாக்குதலை கொண்டாடுகிறதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |