மகனால் கொலையான பாடசாலை ஆசிரியை..திடீர் திருப்பமாக கணவர் கூறிய விடயம்
அமெரிக்காவில் 57 வயது பாடசாலை ஆசிரியை ஒருவர், தனது மகனால் கொல்லப்பட்ட வழக்கில், திடுக்கிடும் உண்மையை உடைத்துள்ளார் ஆசிரியையின் கணவர்.
பாடசாலை ஆசிரியை
கலிபோர்னியாவின் Kindergarten பாடசாலை ஆசிரியை Karyn Lombardo, தனது மகன் Kyle (25) உடனான வாக்குவாதத்தின்போது கொல்லப்பட்டார்.
Burbankயில் உள்ள வீட்டில் கைல் தனது தாயை, செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் கொலை செய்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த Karynயின் கணவர் வின்ஸ் திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார்.
அவர், ''கைல் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் Karynஐ கொல்ல விரும்பவில்லை. சில வகையான வாக்குவாதம் இருந்தது. அப்போது அவள் தலையில் அடிபட்டது. கைல் நிலையற்றவராக இருந்தார். அவர் ஒரு கனிவான, பாரிய இதயம் கொண்டவர். ஆனால் அவர் அந்த நிலைக்கு வந்தபோது அவர் மிகவும் கொந்தளிப்பாக இருந்தார்.
மனநல சேவை கடினமாகிவிட்டது
மேலும், அவரது உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அவருக்குத் தெரியவில்லை. கைல் மருந்துகளை எடுத்துக் கொண்டார், ஆனால் அவை காலப்போக்கில் பலனளிக்கவில்லை.

எலும்புகள் உடைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி சிறுமி மரணம்! காதலியுடன் கைதான தந்தை..அதிர்ச்சி பின்னணி
அவர் வயது வந்தவுடன் மாநில மனநல சேவைகளைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. கைல் பல ஆண்டுகளாக தனது மன ஆரோக்கியத்துடன் போராடினார்'' என தெரிவித்துள்ளார்.
கைல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |