30 நிமிடத்தில் 500 கலோரிகள் எரிக்க வேண்டுமா? இந்த 5 உடற்பயிற்சிகள் தினமும் செய்து வந்தால் போதும்!
பொதுவாக உடல் எடைக்கு முக்கிய காரணமாக கலோரி உள்ளது. எடை இழப்பை பெற உடலில் உள்ள கலோரிகளை எரித்து ஆற்றலாக மாற்ற வேண்டியது முக்கியம்.
அதற்கான சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் உள்ளன.
அவை கலோரிகளை அதிகமாக எரிக்க உதவுகின்றன. அவற்றை செய்வதன் மூலம் 30 நிமிடத்தில் 500 கலோரிகளை எரிக்க முடியும். அவற்றை இப்போது பார்ப்போம்.
படிக்கட்டு ஏறுதல்
படிக்கட்டு ஏறுவது மூலம் மட்டும் கலோரிகளை குறைக்க முடியாது. எனவே படிக்கட்டில் ஏறும்போது கையில் டம்பல்ஸை வைத்து கொள்ளவும்.
பிறகு படி மீது ஏறுதல் மற்றும் இறங்குதல் பயிற்சியை செய்யலாம். டம்பல்ஸை வைத்துக்கொண்டு படிக்கட்டு ஏறும்போது அதிக எடையை கையில் கொண்டிருப்பதால் கலோரிகளை குறைக்க அவை உதவுகின்றன.
ஒரு வேளை உங்களிடம் டம்பல்ஸ் இல்லை எனில் அதுக்குறித்து கவலைப்பட தேவையில்லை. உங்கள் வீட்டில் உள்ள கனமான பொருளை நீங்கள் டம்பல்ஸ்க்கு பதிலாக பயன்படுத்தலாம். உங்கள் வசதிக்கு ஏற்ற அளவில் 2 முதல் 5 கிலோ வரை டம்பல்ஸை பயன்படுத்தலாம்.
தீவிர பயிற்சி
நீங்கள் குறுகிய காலத்தில் அதிக கலோரிகளை எரிக்க விரும்பினால் உங்களுக்கு தீவிர உடற்பயிற்சி உதவி செய்யும். இதற்காக கடினமான உடற்பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். இந்த பயிற்சியானது உடல் கொழுப்பை மிகவும் சீக்கரமாகவே எரிக்க உதவுகிறது. மேலும் கார்டியோ பயிற்சிகளை விடவும் இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம் விரைவாகவே அதிக கலோரிகளை எரிக்க முடியும்.
இந்த பயிற்சியில் 12 ஸ்குவாட் செய்யலாம். பிறகு 8 முதல் 10 வினாடிகள் ஓய்வெடுக்கவும். பின்னர் 20 ஹை நீஷ் பயிற்சியை செய்யலாம்.
ப்ளை மெட்ரிக் பயிற்சிகள்
ஹை நீஷ், ஸ்குவாட்ஸ், புஷ் அப்கள், அல்ட்டர்நேட்டிங் லங்ஸ், பட் கிக்ஸ், மவுண்டைன் க்ளிம்பர், லெக் ரைசஸ் இதில் ஒவ்வொரு பயிற்சியையும் 12 முறை செய்யவும்.
இந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கலோரிகளை எரிப்பதோடு சிறிது நாட்களில் வலுவான தசைகளையும் பெற முடியும். நிச்சயமாக இந்த பயிற்சிகள் அதிகமான கலோரிகளை எரிக்கும்.
க்ராஸ் சாப்ஸ்:
இந்த பயிற்சியை செய்ய உங்கள் இரு கைகளிலும் டம்பல்ஸ் அல்லது எடையுள்ள பொருட்ளை கொண்டிருக்க வேண்டும்.
இந்த உடற்பயிற்சியில் இரண்டு கைகளாலும் ஒரு டம்பல்ஸை பிடித்துக்கொண்டு வலது பக்கம் தலைக்கு மேல் ஓரமாக டம்பல்ஸை பிடிக்க வேண்டும். பிறகு உடலை வளைத்து டம்பல்ஸை தொடைக்கு கீழாக இடது பக்கம் கொண்டு வர வேண்டும். இந்த முறையை 8 முறை செய்யவும்.
ஃபாலிங் புஸ் அப்ஸ்
இது வழக்கமான புஷ் அப்களில் இருந்து மாறுபடுகிறது. இந்த புஷ் அப் முறையை தினமும் 8 புஷ் அப்களாக மூன்று முறை செய்யலாம்