கம்போடியாவில் சைபர் கிரைம் கும்பல்: 105 இந்தியர்கள் உட்பட 3,000 பேர் கைது!
கம்போடியாவில் சைபர் கிரைம் குற்றச்சாட்டில் 105 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்போடியாவில் சைபர் கிரைம்
சைபர் குற்றங்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, கம்போடிய அதிகாரிகள் கடந்த 15 நாட்களில் 138 இடங்களில் தீவிர சோதனைகளை நடத்தியுள்ளனர்.
இந்தச் சோதனைகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 105 இந்தியர்களும், 606 பெண்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1,028 சீனக் குடிமக்கள், 693 வியட்நாமியர்கள், 366 இந்தோனேசியர்கள், 101 வங்கதேசத்தினர், 31 பாகிஸ்தானியர்கள் மற்றும் 82 தாய்லாந்து நாட்டவர்களும் உள்ளனர்.
இந்தச் சோதனைகளின் போது, கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள், போலியான இந்திய மற்றும் சீன காவல் துறை சீருடைகள், போதைப்பொருள் தயாரிப்பு உபகரணங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், எக்ஸ்டஸி பவுடர் மற்றும் பல்வேறு போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவது குறித்து இந்திய அரசு கம்போடிய அதிகாரிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெளிநாடுகளில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தாய்நாடு திரும்பும் இந்தியர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |