கத்தாரில் கவனம்பெற்ற ஒட்டக அழகுப்போட்டி! வைரலாகும் புகைப்படங்கள்
உலக நாடுகளின் ரசிகர்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது.
1930ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியை காண உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் திரள்வது வழக்கம்.
அந்த வகையில் 22வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் 19 நாட்கள் கத்தாரின் 5 முக்கிய நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Spectators watch a camel beauty contest in Ash-Shahaniyah, Qatar ? @reuterspictures pic.twitter.com/0wQ3WCyQBm
— Reuters (@Reuters) November 30, 2022
இதற்கிடையே கத்தாரில் நடைபெற்ற ஒட்டக அழகுப்போட்டி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
கத்தாரின் Ash-Shahaniyah நகரில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. வயது மற்றும் இனத்தின் அடிப்படையில் ஒட்டகங்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுமாம்.
இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.