காட்டுக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்: தீப்பற்றி எரியும் காட்சிகள்! பயணிகளின் நிலை என்ன?
கேமரூனில் 11 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
நேற்று புதன்கிழமை கேமரூனின் Nsimalen விமான நிலையத்திலிருந்து 11 நபர்களை ஏற்றிகொண்டு சென்ற விமானம் மதியம் 2 மணியளவில் நங்கா எபோகோ அருகே சென்று கொண்டிருக்கும் போது மோசமான வானிலை காரணமாக அதன் தகவல் தொடர்பை இழந்து திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில், 11 பேரை ஏற்றிகொண்டு சென்ற விமானம் காடுகளில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்த மீட்பு பணிகளுக்காக வான் மற்றும் நில மீட்புக் குழுக்கள் அனுப்பபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சக அதிகாரி பேசுகையில், மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துகுள்ளானது என்றும் மீட்கப்படுபவர்கள் யாரையாவது காப்பாற்ற முடியுமா என்று பார்க்க முயற்சிப்பதாகவும் கூறினார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக...பிரித்தானியாவின் அட்டர்னி ஜெனரல் வழங்கிய புதிய ஒப்புதல்
ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தின் உரிமையாளர் குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.
இந்த எதிர்பாராத திடீர் விபத்திற்கு முன்னதாக நாட்டின் தலைநகர் Yaounde-வை ஒரு பெரிய புயல் தாக்கியது குறிப்பிடதக்கது.