இதை மட்டும் செய்து விடாதீர்கள்! கமிலா, கேட் மிடில்டன் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுரை
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது கல்லினன் வைரத்தை ராணி கன்சார்ட் கமிலாவும், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனும் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கல்லினன் வைரத்தின் வரலாறு
கல்லினன் வைரம் 1905ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது.
இந்த வைரமானது அறிவியலாளர்களின் கணிப்புப்படி பூமிக்கு அடியில் சுமார் 250 முதல் 400 மைல் தொலைவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும், இதன் காலம் 1 பில்லியன் வருடங்களுக்கு முந்தியது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டைனோசர்கள் காலத்துக்கு முந்தியது மற்றும் உலகில் உயிர்களின் தோன்றுவதற்கு முந்தியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Royal family- அரச குடும்பம்(Getty)
இந்த கல்லினன் வைரமானது பல மாத வேலைப்பாடுகளுக்கு பிறகு I முதல் IX வரையிலான துண்டுகளாக வெட்டப்பட்டது.
அவற்றில் கல்லினன் iii மற்றும் கல்லினன் iv ஆகிய வைரங்கள் தென்னாப்பிரிக்க பிரிட்டிஷ் காலனியின் விசுவாசத்தின் அடையாளமாக கிங் எட்வர்ட் vii க்கு பரிசாக வழங்கப்பட்டது.
இதனை பிரித்தானிய அரச குடும்பம் சந்ததி சந்ததியாக அரச விழாக்களில் அணிவதை வழக்கமாக கொண்டு உள்ளனர், மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த கல்லினன் வைரங்கள் ராணி கன்சார்ட் கமிலாவிடமும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனிடமும் வந்தடைந்துள்ளது.
Cullinan diamond- கல்லினன் வைரம் (Getty)
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சுற்றுப்பயணம்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு, மன்னர் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்டதையடுத்து தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா(Cyril Ramaphosa) நவம்பர் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரை பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Queen Elizabeth ii - ராணி இரண்டாம் எலிசபெத் (Getty)
மேலும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸ், குயின் கன்சார்ட் கமிலா வரவேற்பார்கள் என்று பிரித்தானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கமிலா, கேட் மிடில்டன் இருவருக்குமான அறிவுரை
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது கல்லினன் வைரத்தை ராணி கன்சார்ட் கமிலாவும், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனும் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Kate Middleton & camilla - கேட் மிடில்டன் & கமிலா (Getty)
ஏனென்றால் அவை துரதிருஷ்டவசமாக தென் ஆப்பிரிக்கா மீதான பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்தக் கூடும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.