டயானாவுக்கு பதிலாக ராணியாகும் கமீலா மீது மக்களுக்கு கோபம்: பிரித்தானியர்களுக்கு அல்ல...
மன்னருடைய முடிசூட்டுவிழாவின்போது கமீலாவும் ராணியாக முடிசூட்டப்பட உள்ள நிலையில், அவர் டயானாவின் இடத்தைப் பறித்துக்கொண்டார் என்னும் கோபம் இன்னும் மக்களுக்கு உள்ளது என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.
பிரித்தானியர்களுக்கு அல்ல...
அவர் சொல்வது பிரித்தானியர்களைக் குறித்து அல்ல, அமெரிக்கர்களைக் குறித்து. ஆம், கமீலா டயானாவின் இடத்தைப் பறித்துக்கொண்டார் என்பதால் கமீலா மீது அமெரிக்கர்கள் இன்னமும் வன்மம் வைத்துள்ளார்கள் என்கிறார் அமெரிக்க ஊடகமான ABC News நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான Deborah Roberts.
Image: PA
இளவரசி டயானாவின் இதயத்தை உடைத்த பலருடன் தொடர்புடைய மனிதர் சார்லஸ் என்று கூறும் Deborah, Queen Consort என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக, கமீலா, ராணி என அழைக்கப்படப்போவதால், அரியணையில் வீற்றிருக்கும் மன்னருக்கு அருகில் டயானாவின் இடத்தில் வேறொரு பெண் அமரப்போகிறார் என்ற ஒரு எண்ணம் நிலவுகிறது என்கிறார்.
டயானா மீது பிரியம்
அமெரிக்கர்கள், தங்களுக்கு ராஜ குடும்பத்தின்மீது அக்கறை இல்லை என்பதுபோல காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் இரகசியமாக ராஜ குடும்ப நிகழ்வுகளை இரசிக்கிறார்கள் என்கிறார் Deborah.
டயானாவை ராஜ குடும்பம் சரியான விதத்தில் நடத்தவில்லை என்னும் எண்ணம் இன்னும் கொஞ்ச காலம் அமெரிக்கர்கள் மனதில் நீடித்திருக்கும் என்கிறார் Deborah.
Image: Press Association
ஹெச் ஐ வி பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொஞ்சம் கூட தயங்காமல் தொட்டுத் தூக்கி தன் கைகளில் வைத்துக்கொண்ட டயானாவையும், வெள்ளை மாளிகையில் பிரபல நடிகர் ஜான் ட்ரவோல்ட்டாவுடன் நடனமாடிய டயானாவையும் தங்களுடன் இணைத்துப்பார்க்கிறார்கள் அமெரிக்கர்கள் என்கிறார் Deborah.
ஆக, அப்படிப்பட்ட தங்கள் அன்பிற்குரிய, இரக்கமுள்ள, டயானாவின் இடத்தை கமீலா எடுத்துக்கொள்வதாகத்தான் அமெரிக்கர்கள் கருதுகிறார்கள் என்கிறார் அவர்.