நீடா அம்பானியின் 500 கோடி ரூபாய் நெக்லஸை வெறும் ரூ.178 -க்கு வாங்கலாமா? வியாபாரியின் யுக்தி
முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி அணிந்திருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள நெக்லஸை மொடலாக வைத்து வெறும் ரூ.178 -க்கு நெக்லஸை வியாபாரி விற்பனை செய்து வருகிறார்.
முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நீடா அம்பானி காஞ்சிபுரம் புடவையுடன் அணிந்திருந்த மரகத நெக்லஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நெக்லஸின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது.
வியாபாரி
இந்நிலையில், நீடா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் போலவே இந்திய சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
அந்தவகையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் நீடா அம்பானி நெக்லெஸ் விலை வெறும் ரூ.178 என கூறி விற்பனை செய்யக்கூடிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த நெக்லஸ் ஆனது பல்வேறு வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் அவர் அணிந்திருந்தது போன்ற மரகத பச்சை நெக்லஸ் தான் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வியாபாரியின் தொழில் யுக்தியை பாராட்டி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |