உடற்பயிற்சிக்கு பின் க்ரீன் குடிக்கலாமா? நன்மைகள் உண்டா?
Exercises
By Kishanthini
சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளின் மூலமே உடலில் நடக்கும் மெட்டபாலிசம் போன்றவற்றை முறைப்படுத்த முடியும்.
அதில் க்ரீன் டீ மிக முக்கியமான ஒன்றாக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.
குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பின்பு க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும்போது இன்னும் கூடுதலான பலன்களைப் பெற முடியும்.தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு நாளைக்கு 2 கப் வரையில் க்ரீன் டீ எடுத்துக் கொள்வது உடற்பயிற்சிக்குப் பின்னர் உடலில் கொழுப்பை எரிக்க வளர்சிதை மாற்றத்தை வேகமாக்க உதவுகிறது. தொடர்ச்சியாக 12 வாரங்கள் தொடந்து எடுத்துக் கொள்ளும் போது இதற்கான பலனை அதிகமாகப் பெற முடியும் என்கின்றனர் உடற்பயிற்சியாளர்கள்.
- க்ரீன் டீயில் உள்ள காஃபைன் உடல் சோர்வுகளை நீக்கி நம்மை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சியின்போது நிறைய பேருக்கு சீரற்ற இதயத் துடிப்பு இருக்கும். இதை சரிசெய்து இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.
-
ஒரு கப் க்ரீன் டீயில் வெறும் 3 கலோரி மட்டுமே இருக்கிறது. சர்க்கரை சேர்க்காமல் க்ரீன் டீ எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பும் கரையும்.
தினசரி தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் தசைகளில் வலி அல்லது வீக்கம் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று தான். இந்த உடல் வீக்கங்களைக் குறைக்க க்ரீன் டீ பயனுள்ளதாக இருக்கும்.
- ஒரு நாளைக்கு 2 முதல் 4 கப் வரையிலும் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு உயர் கொலஸடிரால் பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு .
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US