மருதாணி, மெகந்தி வைத்திருந்தால் ஓட்டு போட முடியாதா? உண்மை தகவல் என்ன
கைகளில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளில் மெகந்தி அல்லது மருதாணியை போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சில சமயங்களில் ஆண்களும் கைகளில் மருதாணி வைக்கின்றனர்.
ஆனால், சில நாட்களாக கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த தகவலானது குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் கையில் போடப்பட்ட மருதாணியை ரசாயனம் கொண்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை தமிழகத்தில் தேர்தல்
தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் நாளை (ஏப் -19) நடைபெறவிருக்கும் நிலையில், மருதாணி விவகாரம் குறித்து தேர்தல் அலுவலரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. சில சமூகத்தினர் கொண்டாட்டங்களின் போது மருதாணி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டு மானாலும் வாக்களிக்கலாம்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |