இராணுவ பணிகளுக்காக 6 Bombardier Global 6500 விமானங்களை வாங்கும் கனடா
கனடா அரசு, Bombardier Global 6500 வகை 6 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த விமானங்கள், மருத்துவ அவசர வெளியேற்றம், பேரிடர் நிவாரணம், மனிதாபிமான உதவி மற்றும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பல்துறை பணிகளில் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
விமானங்கள் Greater Toronto பகுதியில் Bombardier நிறுவனத்தின் Global Aircraft Assembly Centre-ல் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் உட்புற அமைப்புகள் Greater Montreal-ல் நிறைவு செய்யப்படும்.

Royal Canadian Air Force (RCAF), 1983 முதல் Bombardier Challenger விமானங்களை இயக்கி வருகிறது.
இப்போது, Global 6500 விமானங்கள் அதிக தூரம் பறக்கும் திறன் மற்றும் மேம்பட்ட வசதிகளை வழங்குவதால், RCAF-க்கு முக்கிய பலனாக இருக்கும்.
முதல் விமானம் 2027 கோடை காலத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bombardier நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Éric Martel, “இந்த விமானம் உலக தரத்தில் தயாரிக்கப்பட்ட, கனடாவின் பெருமை. பல்வேறு பணிகளைச் செய்யும் திறன் கொண்டதால், உலக அரசுகளின் முதன்மை தெரிவாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம், கனடாவின் வான்வழி மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ளூர் சப்ளைச் சங்கிலியை வலுப்படுத்தும். 60-க்கும் மேற்பட்ட கனடிய சப்ளையர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
PwC அறிக்கையின்படி, 2022-ல் Bombardier நடவடிக்கைகள் 518.3 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான GDP தாக்கம், 3,747 முழுநேர வேலை வாய்ப்புகள், மற்றும் 309.1 மில்லியன் கனேடிய டொலர் ஊதிய வருமானம் உருவாக்கியுள்ளன.
கனேடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் Stephen Fuhr, “இந்த ஒப்பந்தம், Defence Investment Agency மூலம் இராணுவ உபகரணங்களை விரைவாக வழங்கும் புதிய மாற்றத்தை குறிக்கிறது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்கி, புதுமையை ஊக்குவித்து, பாதுகாப்பை வலுப்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |