ஒரு மூக்கு கண்ணாடியால் தம்பதிக்கு கிடைத்துள்ள பல கோடி பணம்! எப்படி தெரியுமா? சுவாரசிய தகவல்
கனடாவில் கணவன் மூக்கு கண்ணாடி அணிந்ததால் தம்பதி பெரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் மைக்கேல் ஸ்ட்ரேஞ். இவர் மனைவி ஜெனிபர். இவர்கள் லொட்டோ மேக்ஸ் லொட்டரி டிக்கெட் வாங்கியிருந்த நிலையில் அதில் பரிசு விழுந்ததா என்பதை தெரிந்து கொள்ள லொட்டரி சீட்டை மைக்கேல் சரிபார்த்துள்ளார்.
மூக்கு கண்ணாடி அணியாமல் லொட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதா என மைக்கேல் பார்த்த நிலையில் கனேடிய டொலரில் $10 (கிட்டத்தட்ட ரூ 2500) பரிசு விழுந்ததாக நினைத்தார். சரி, மிக சிறிய பரிசு தான் விழுந்துள்ளது என நினைத்து கொண்ட போது தான் அந்த ட்விஸ்ட் அரங்கேறியது.
BCLC
ஏனெனில் மூக்கு கண்ணாடியை அணிந்து மீண்டும் ஒருமுறை பார்த்த போது பல பூஜ்ஜியங்களை அவர் படிக்காமல் விட்டிருந்தது தெரியவந்தது. ஆம்! உண்மையில் தம்பதிக்கு லொட்டரியில் $1 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ 27,64,86,968.20) பரிசு விழுந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: கனடாவில் மருத்துவமனைக்கு சென்ற 37 வயது பெண்ணிற்கு அங்குள்ள ஊழியரால் நேர்ந்த நிலை!
அதன்படி இந்த தம்பதி பெரும் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். மைக்கேல் கூறுகையில், இவ்வளவு பெரிய வெற்றி உண்மையில் அதிர்ச்சியை கொடுத்தது. மூக்கு கண்ணாடி அணிந்ததால் தான் உண்மையான பரிசு பணம் குறித்து அறிய முடிந்தது.
பரிசு பணத்தை வைத்து முதலில் புதிய கார் வாங்கிவிட்டு வீட்டை புதுப்பிப்போம்.
எங்கள் வாழ்க்கையே மாறி போன தருணம் இது, எங்கள் குடும்பத்தினருக்கு பேச்சே வரவில்லை என இன்ப அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.