கனடாவின் Open Work Permit விண்ணப்பத்திற்கு அவகாசம் நீட்டிப்பு
கனடாவின் Open Work Permit-க்கு விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசு, தற்காலிக குடியிருப்பாளர்களை நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற்றும் புதிய திட்டத்தின் கீழ், திறந்த வேலை அனுமதிக்கான (Open Work Permit) விண்ணப்ப திகத்திடை 2026 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
இது, 2021-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக பொது கொள்கையின் தொடர்ச்சியாகும்.
இந்த கால நீட்டிப்பு, கனடாவில் தற்காலிக குடியிருப்பாளராக உள்ளவர்கள், நிரந்தர வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் காலத்தில், எந்தவொரு தொழிலிலும், எந்தவொரு நிறுவனத்திலும் வேலை செய்ய அனுமதிக்கிறது.
இதன்மூலம், வேலை அனுமதி புதுப்பிப்பின் தேவையை தவிர்க்க முடியும்.
மேலும், இந்த புதிய பொது கொள்கை, வெளிநாடுகளில் உள்ள தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் விண்ணப்ப உரிமையை வழங்குகிறது. இது குடும்பம் மீண்டும் ஒன்றிணைவதை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த கொள்கை, கனடாவில் வேலை செய்ய விரும்பும் நிரந்தர குடியிருப்பு விண்ணப்பதாரர்களுக்கு பெரும் நன்மையாக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |