கனடா குடிவரவு கொள்கையில் மாற்றம்: பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு எளிதில் நிரந்தர குடியுரிமை
கனடா அதன் குடிவரவு கொள்கையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவரவுள்ளது.
இதன்மூலம் semi-skilled workers எனப்படும் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை எளிதில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் (IRCC) குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் (IRPA) மாற்றம் செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த மாற்றம், பயிற்சி, கல்வி, அனுபவம் மற்றும் பொறுப்புகள் (TEER) நிலைகள் 4 மற்றும் 5-ல் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கான புதிய நிரந்தர பொருளாதார குடிவரவு வகுப்பை உருவாக்கும் நோக்கத்தில் உள்ளது.
இந்த புதிய மாற்றம், பரந்த அளவிலான திறன்கள் மற்றும் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர குடியுரிமையை (Permanent Residency) எளிதில் வழங்கும். இதன் மூலம் பொருளாதார குடிவரவு முறைமையை (economic immigration system) நவீனமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கனடாவின் TEER முறை என்பது என்ன?
TEER (Training, Education, Experience, and Responsibilities) முறை, தேசிய தொழில் வகைப்படுத்தல் (NOC) முறையின் புதுப்பிப்பாக 2022ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வேலைகளை பழைய "திறன் நிலைகள்" க்கு பதிலாக, TEERS என்று அழைக்கப்படும் பல்வேறு வகைகளில் வகைப்படுத்துகிறது.
TEERs 0-3 என்பது பொதுவாக இரண்டாம் நிலைக் கல்வி அல்லது குறிப்பிட்ட நீளம் கொண்ட பயிற்சி தேவைப்படும் வேலைகளுக்கானது.
TEERS 4 மற்றும் 5 ஆகியவை உயர்நிலைப் பள்ளிக் கல்வி, வேலையில் பயிற்சி மட்டுமே தேவைப்படும் வேலைகளுக்கானது.
TEER 5ல், எவ்வித முறையான கல்வியும் இல்லாமல், குறுகிய கால பயிற்சி மட்டுமே தேவைப்படும் வேலைகளுக்கானது.
புதிய மாற்றங்கள் என்ன?
இந்த மாற்றங்கள் TEER 4 மற்றும் 5 வேலைகளில் கனேடிய வேலை அனுபவம் பெற்ற வெளிநாட்டு நபர்கள் எளிதாக நிரந்தர குடியுரிமையை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
இது இவ்வகையான பணியாளர்கள் கனேடிய பொருளாதாரத்தில் தொடர்ந்து பங்களிக்கவும், இவ்வகைத் துறைகளில் தொழில்சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada Permanent Residency, Canada immigration policy, Canada PR, Permanent Residency for semi-skilled immigrant workers