அமெரிக்காவில் பொதுமக்கள் மீது பாய்ந்த வாகனம்: புத்தாண்டு தினத்தில் 10 பேர் உயிரிழப்பு
புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு தினத்தில் பயங்கர தாக்குதல்
புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ்(New Orleans) நகரின் மையப்பகுதியில் நடந்த கொடூரமான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 35 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சாரதி ஒருவர் தனது வாகனத்தை பிரெஞ்சு காலனி பகுதியில் உள்ள பர்பன் தெருவில் கூடியிருந்த மக்கள் மீது வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தியதை அடுத்து இந்த சம்பவத்தை அதிகாரிகள் பயங்கரவாதச் செயலாக கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 3:15 மணிக்கு அரங்கேறியுள்ளது. வாகன தாக்குதலுக்கு பிறகு சாரதி பொலிஸ் அதிகாரியுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டார்.
இதையடுத்து பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் வாகன சாரதி கொல்லப்பட்டார்.
FBI இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர், அத்துடன் பிரெஞ்சு காலனி பகுதியில் சாத்தியமான வெடிபொருட்களை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நியூ ஆர்லியன்ஸ் மேயர் லாடோயா கான்ட்ரெல்(LaToya Cantrell) இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தார், இதை "பயங்கரவாத தாக்குதல்" என்று அடையாளம் காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |