பிரெஞ்சு மொழி தெரிந்தால் நிரந்தர வதிவிட வாய்ப்பு - கனடாவின் Express Entry திட்டம்
பிரெஞ்சு மொழி பேசும் திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான விரைவான பாதையை கனடா வழங்குகிறது.
பிரஞ்சு மொழியில் நிபுணத்துவம் பெற்ற திறமையான தொழிலாளர்களுக்கு, கனடா அரசு 2025-ஆம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிடம் (Permanent Residency) வழங்கும் வாய்ப்பை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த திட்டம், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்காக தேவையான திறமையான பணியாளர்களை தேர்வு செய்யும் ஒரு ஓன்லைன் விண்ணப்ப முறையாகும்.
விண்ணப்பதாரர்கள், Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program அல்லது Canadian Experience Class ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Provincial Nominee Program வாயிலாக கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும்.
பிரஞ்சு மொழியில் NCLC நிலை 7 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால், கூடுதல் 25 புள்ளிகள் வழங்கப்படும்.
மேலும், ஆங்கிலத்திலும் CLB 5 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் இருந்தால், மேலும் 50 புள்ளிகள் கிடைக்கும்.
இது, விண்ணப்பதாரர்களின் Comprehensive Ranking System (CRS) மதிப்பெண்களை உயர்த்தும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் மொழி திறனுக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்டால், 60 நாட்களுக்குள் முழுமையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கனடாவில் வேலை அனுபவம் பெற்றால் கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். அதற்காக Francophone Mobility work permit மூலம் வேலை வாய்ப்புகள் பெறலாம்.
இந்த வாய்ப்பு, பிரஞ்சு பேசும் இந்தியர்களுக்கு கனடாவில் புதிய வாழ்க்கையை தொடங்க சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |