74 சதவீத இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ள கனடா
நான்கில் மூன்று இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் கனடா அரசு மேற்கொண்ட புதிய மாணவர் விசா கட்டுப்பாடுகள், இந்திய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்திய மாணவர் வீசா விண்ணப்பங்களில் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த 32 சதவீத நிராகரிப்பு விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.

இந்த மாற்றம், கனடாவின் தற்காலிக குடிவரவு கட்டுப்பாடுகள் மற்றும் விசா மோசடிகளை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இதன் விளைவாக, இந்திய மாணவர்களின் கனடா கல்வி கனவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆகஸ்ட் மாதத்தில் 20,900-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருந்த நிலையில், 2025 ஆகஸ்ட் மாதத்தில் அது 4,515-ஆக குறைந்துள்ளது.
கனடாவிற்கு அதிகமான மாணவர்களை அனுப்பும் நாடாக இந்தியா இருந்தாலும், தற்போது 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உள்ள நாடுகளில், இந்தியாவே மிக அதிக நிராகரிப்பு விகிதம் கொண்ட நாடாக மாறியுள்ளது.
ஒட்டாவா அரசு, இந்த நடவடிக்கைகள் போலி கல்வி அனுமதிகள் மற்றும் விசா முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை, கனடாவை கல்விக்கான இலக்காகக் கருதும் இந்திய மாணவர்களின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, பிற நாடுகளின் பக்கம் கவனத்தை திருப்பும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
Canada student visa rejection 2025, Indian students Canada visa crisis, 74% visa refusal rate Canada, Canada international student policy, Indian study permit decline Canada, Canada immigration crackdown 2025, student visa fraud prevention Canada, Canada vs India education migration, Ottawa study permit restrictions, Indian applicants Canada visa news