கனடா: மிசிசாகாவில் துப்பாக்கிச் சூடு; நான்கு பேர் காயம்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மிசிசாகா நகரத்தில் நடந்த பயங்கமான துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மிசிசாகா (Mississauga) நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நான்காவது நபரின் நிலை குறித்து தெரியவில்லை.
இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை டிக்ஸி சாலைக்கு மேற்கே உள்ள குயின்ஸ்வே கிழக்கில் உள்ள பிளாசாவில் உள்ள ஒரு வணிகத்திற்கு வெளியே மாலை 6:30 மணியளவில் நடந்ததாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
CTVNews
சம்பவம் குறித்து அறிந்ததும், அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 3 பேரையும் கண்டறிந்து, அவர்களை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் மற்ற இருவரின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும், சுடப்பட்ட நான்காவது நபர் பின்னர் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட வாகனம், BD85909 உரிமத் தகடு கொண்ட வெள்ளை 2020 டாட்ஜ் ராம் 1500 பிக்கப் டிரக் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
CHCH
சந்தேக நபர்களின் எண்ணிக்கையை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை. சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்து பலர் தப்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 ext என்ற எண்ணில் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1233 அல்லது 1-800-222-TIPS (8477) அல்லது peelcrimestoppers.ca இல் அநாமதேயமாக தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |