ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடி: உதவிகரம் நீட்டும் கனடா!
ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் நெருக்கடியை குறைக்க, கனடாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கனடா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை ரஷ்ய அரசு பெரும் அளவு குறைத்துள்ளது.
இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையான உயர்வை சந்தித்துடன் மட்டுமில்லாமல் உணவு மற்றும் வாழ்வாதார செலவுகளின் நெருக்கடியும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், கிழக்கு கடற்கரையிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கனடா தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக கனடா தெரிவித்துள்ள தகவலில், ஐரோப்பிய நாடுகளின் எரிசக்தி தடைகளை தணிக்கவும், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் எரிசக்தி ஏற்றுமதிக்கு மாற்று திட்டம் வழங்கவும், கனடா அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எவ்வாறு முடுக்கிவிடுவது மற்றும் ஏற்றுமதி செய்வது என்பது பற்றி ஐரோப்பாவில் உள்ள அதன் நட்பு நாடுகளுடன் கனடா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலில், கனடாவின் முன்னேற்றமும், மிகவும் கடினமான எரிவாயு நெருக்கடியை கையாளும் நமது ஐரோப்பிய நண்பர்களுக்கு உதவுவதும் முக்கியம் எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பல பெண்களையும், சிறுமிகளையும் துன்புறுத்தி.. அமெரிக்க பாப் பாடகருக்கு 30 ஆண்டுகள் சிறை!
இதனை காலநிலை மாற்றப் பிரச்சினையைக் கையாளும் விதத்தில் செய்ய வேண்டும். இவற்றையே நாங்கள் குறிப்பாக ஜேர்மனுடனும் ஸ்பெயினுடனும் பேசி வருகிறோம் எனத் தெரிவித்தார்.