கனடா போறீங்களா? அப்போ கண்டிப்பா இந்த இடங்கள மிஸ் பண்ணிடாதீங்க
கனடாவானது, மிகவும் அழகான இடங்களில் ஒன்றாகும். இங்கு கண்ணைக் கவரும் பல இடங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள சுற்றுலாத்தளமானது ஏனைய நாடுகளை விடவும் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது.
இதனாலேயே இங்கு அனேகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அழகிய சாலைகள், பனிமூடிய மலைகளின் அழகு என்பன பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கின்றன. சரி இனி அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
Niagara Falls
நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நீர்வீழ்ச்சியானது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையில் மூன்று தனித்தனி தொகுப்புகளாக காணப்படுகின்றன. இதில் குதிரைவாலி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
ஒருவித மாயாஜால அனுபவத்தை தேடுபவர்களுக்கு இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியை இரவில் பார்வையிடும்போது ஒரு வித்தியாசமான உணர்வை அனுபவிக்கலாம்.
CN Tower
கனடாவில் பார்ப்பதற்கு மிகவும் சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று. வானத்தை தொட்டுப் பார்க்கும் இந்த சி.என் டவரானது, 360 ரெஸ்டூரன்ட்டுகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கண்ணாடியில் நடப்பதற்கும், மேலிருந்து சுற்றியுள்ள இடங்களின் அழகைப் பார்ப்பதற்கும் இது மிகவும் உகந்த ஒரு இடமாகக் காணப்படுகிறது.
Capilano Suspension Bridge
இந்தப் பாலமானது, 140 மீட்டர் நீளமும் நதியிலிருந்து 70 மீட்டர் உயரமும் கொண்டது. சுற்றியும் பச்சைப் பசேலென்ற காட்டுக்கு நடுவில் இந்தப் பாலம் காணப்படுகிறது. இந்த இடமானது உங்கள் தைரியத்தை பரீட்சை பார்க்கும் ஒரு தளமாகவும் காணப்படுகிறது.
Jasper National Park
கனடாவில் சுற்றிப் பார்க்க சிறந்தவொரு இடமாக இது காணப்படுகிறது. இந்த இடத்தில் அமைந்துள்ள இயற்கை காட்சிகளானது, பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
Perce Rock
இந்தப் பாறையானது கடலின் நடுவில் காணப்படுகிறது. இயற்கையாக அமையப்பட்ட இந்த பாறையானது பார்ப்பவர்களை அதிசயிக்க வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதை சுற்றி பல வீடுகளும் காணப்படுகின்றன.
Pyramid Lake
இந்த இடமானது மிகவும் அமைதியான மற்றும் அழகான ஒன்றாகவும் காணப்படுகிறது. இங்கே ஐஸ் ஸ்கேட்டிங் வரையில் செய்யலாம். புகைப்படம் எடுப்பதை விரும்புபவர்களுக்கு இதுவொரு சரியான இடமாகக் காணப்படும்.
Churchill
சுற்றுலாத் தளத்துக்கு இது மிகவும் அருமையான ஒரு இடமாகக் காணப்படுகிறது. பனிக் கரடிகளின் தாயகமாக இது விளங்குகிறது. சாகச விரும்பிகளுக்கு இது மிகவும் அருமையான ஒரு இடம்.
Quebec City
இது மிகவும் பழமையான ஒரு நகரமாகும். இங்கே துணையுடன் வருபவர்களுக்கு ரம்மியமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். இங்கே பல அம்சங்கள் மிகவும் அழகாக காணப்படுகின்றன.