டெஸ்லா காரை வீடாக மாற்றி வாழும் இளம் பெண்: டிக்டாக்கில் குவியும் பாராட்டுகள்
கனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட்டு விட்டு தனது செல்லப் பிராணிகளுடன் டெஸ்லா காரில் வாழ்ந்து வரும் சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.
காரில் வசிக்கும் பெண்
கனடா நாட்டை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஸ்டெபானி என்ற இளம் பெண் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட்டு விட்டு டெஸ்லா காரில் அவரது செல்லப்பிராணிகளுடன் வசித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளத்தில் Little Hippy Girl என்ற பெயரில் கணக்குகளை வைத்துள்ளார்.
சுதந்திரமாக வசிக்க வேண்டும் என்பதற்காகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் வசிக்க வேண்டும் என்பதற்காகவும் தனக்கு சொந்தமான இருக்கும் வீட்டை விட்டு விட்டு ஸ்டெபானி தனது டெஸ்லா காரையே வீடாக மாற்றி செல்லப்பிராணியுடன் வசித்து வருகிறார்.
இதனை அவர் வீடியோவாகவும் பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்தனையும் காருக்குள்
அதில் அவருடைய நாய் மற்றும் பூனை படுப்பதற்கான படுகை வசதி, அலங்கார பொருட்கள், வேலைக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை தன்னுடைய காரில் அழகாக செட்டப் செய்துள்ளார் என்பதை பார்க்க முடிகிறது.
அத்துடன் காரின் பின்புறத்தில் சமையலுக்கு தேவையான உபகரணங்களையும் ஸ்டெபானி வைத்துள்ளார்.
கழிப்பறை வசதிகள் மட்டும் தன்னிடம் இல்லை என்றும், அதற்கு ஜிம்கள், பொது கழிப்பறைகள் மற்றும் மால்களை பயன்படுத்துவதாக ஸ்டெபானி தெரிவித்துள்ளார்.