பிரபல ரவுடி கனடாவில் சுட்டுக் கொலை: திருமண நிகழ்ச்சியில் புகுந்த மர்ம கும்பல்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக பிரபல ரவுடி சாம்ரா மற்றும் அவரது மூத்த சகோதரர் ரவீந்தர் கனடாவில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வெளியேறிய போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி
கனடா பொலிஸாரின் மிகவும் கொடூரமான ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்த 28 வயதுடைய பஞ்சாப்-ஐ பூர்விகமாக கொண்ட பிரபல ரவுடி சாம்ரா மற்றும் அவரது மூத்த சகோதரர் ரவீந்தர் ஆகிய இருவரும் கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியேற பிறகு மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ப்ரேசர் தெருவில் அதிகாலை 1.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு சாம்ரா, ஃப்ரேசர்வியூ பேங்க்வெட் ஹாலில்(Fraserview Banquet Hall) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார்.
சாம்ரா மற்றும் அவரது மூத்த சகோதரர் ரவீந்தர் இருவரும் ரவுடி கும்பல்களை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் கனடா பொலிஸாரின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட இருவரும் UN கும்பலுடன் தொடர்பில் இருப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர் ஒருவர் வழங்கிய தகவலில், அடையாளம் தெரியாத சிலர் திருமணம் ஹாலுக்குள் நுழைந்து, DJ கலைஞரிடம் இசையை நிறுத்துமாறு உத்தரவிட்டனர், அப்போது ஹாலில் 60 விருந்தினர்கள் வரை இருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
கொலை சம்பவம் தொடர்பாக அவசர அழைப்புகள் வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியால் சுடப்பட்ட நபர்களுக்கு CPR முதலுதவி சிகிச்சை அளித்தனர், இருப்பினும் ஆம்புலன்ஸ் சேவை வருவதற்கு முன்னர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நடத்தப்பட்டு இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விபரம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.