பிரான்சில் கனேடிய பேராசிரியருக்கு சிறைத்தண்டனை: இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்படுமா?
கனேடியரான பேராசிரியர் ஒருவருக்கு பிரான்ஸ் நாட்டின் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
லெபனான் கனேடியரான Hassan Diab (69) என்னும் பல்கலை பேராசிரியருக்கு பாரீஸ் தேவாலாயம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு பிரான்ஸ் நாட்டில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
Photograph: Lars Hagberg/AFP/Getty Images
இந்த சம்பவம் நிகழ்ந்தது இப்போதல்ல. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு. 1980ஆம் ஆண்டு, Copernic synagogue என்னும் அந்த தேவாலயத்தில் 300க்கும் அதிகமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, தேவாலயத்தின் வெளியே வெடிகுண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள், 46 பேர் காயமடைந்தார்கள்.
தண்டனை அறிவிப்பு
தற்போது, Hassanக்கு அந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் மீது கைது வாரண்ட் ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Photograph: Georges Bendrihem/AFP/Getty Images
ஆனால், Hassan பிரான்சில் இல்லை. அவர் கனடாவில் இருக்கிறார். அவர் பிரான்சில் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்கவும் இல்லை. அவர் இல்லாமலேதான் அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கனடாவிலிருந்து பிரன்சுக்கு நாடுகடத்தப்படுவாரா என்பது தெரியவில்லை. அத்துடன், இந்த பிரச்சினையால் கனடாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவில் எவ்வித பாதிப்புகள் ஏற்படும் என்பதும் தெரியவில்லை.