ஜப்பானில் 1200 ஆண்டுகள் பழமையான கோவில் சேதம்: 17 வயது கனேடிய சுற்றுலா பயணியின் அத்துமீறிய செயல்

Japan Canada Crime
By Thiru Jul 11, 2023 07:08 PM GMT
Report

ஜப்பானில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை கனேடிய சுற்றுலா பயணியான 17 வயது சிறுவன் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலை சேதப்படுத்திய சிறுவன்

ஜப்பானின் நாராவில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தோஷோடைஜி கோண்டோ கோவில் வளாகத்தில் உள்ள மரத்தூண்னை கனேடிய சுற்றுலா பயணியான 17 வயது சிறுவன் ஒருவன் ஜூலை 7ம் திகதி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாகவும், பண்டைய நாராவின் வரலாற்று சின்னங்களை உருவாக்கும் 8 தளங்களில் ஒன்றாகவும் விளங்கும் இந்த கோவிலில் சிறுவன் சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

canadian-tourist-defacing-1200-yr-old-japan-temple- ஜப்பானில் 1200 ஆண்டுகள் பழமையான கோவில் சேதம்getty

கோவிலில் உள்ள 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தூணில் கனேடிய சுற்றுலா பயணியான 17 வயது சிறுவன் தன்னுடைய கை நகங்களால் “ஜூலியன்” என பெயரை எழுதி சேதப்படுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தூணில் தரையில் இருந்து 170 செ.மீ உயரத்தில் சிறுவன் “ஜூலியன்” என கை நகங்களால் கிறுக்குவதை பார்த்த அங்கிருந்த ஜப்பான் நாட்டவர் ஒருவர் சிறுவனை தடுத்துள்ளார், பின்னர் கோவில் நிர்வாக அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இதையடுத்து சிறுவனிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது, ஜப்பான் கலாச்சாரத்தை சேதப்படும் எந்தவொரு உள்நோக்கத்திலும் இந்த தவறை செய்யவில்லை என்று சிறுவன் தெரிவித்துள்ளான்.

canadian-tourist-defacing-1200-yr-old-japan-temple- ஜப்பானில் 1200 ஆண்டுகள் பழமையான கோவில் சேதம்Nara Prefectural Police - Twitter

இதற்கிடையில், சிறுவன் கலாச்சார சொத்துக்களை சேதப்படுத்தி இருந்தால் அவர் வழக்கறிஞரிடம் அனுப்பி வைக்கப்படுவார், ஆனால் எப்படி இருப்பினும் அவர் தற்போது கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கலாச்சார சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் ஜப்பானிய விதிப்படி, 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லது 300,000 யென் அபராதமாக செலுத்த வேண்டும். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US