கனடாவில் ஆபத்தை சுவாசித்து வாழ்ந்துவரும் கோடிக்கணக்கான மக்கள்., ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கனடாவில் 1 கோடி மக்கள் அதிக ராடான் வாயு (Radon Gas) அடங்கிய வீடுகளில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
கனடாவில் ராடான் என்ற உயிர்க்கொல்லி வாயு அதிகரித்து, மில்லியன் கணக்கான மக்களை உடல்நல ஆபத்துக்கு உள்ளாக்கி வருகிறது என கல்கரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கரி பல்கலைக்கழகத்தின் 2024 Cross-Canada Survey of Radon Exposure-ன் தரவு, 18 சதவீத கனேடிய வீடுகளில் அதிக அளவு ரேடான் வாயு இருப்பதைக் காட்டுகிறது. இது Health Canada-வின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரங்களை மீறுகிறது.
அதாவது சுமார் 1.03 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் இவ்வாயுவை உட்கொண்டு நுரையீரல் புற்றுநோய் (lung cancer) வரும் அபாயத்தில் உள்ளனர்.
ராடான் என்றால் என்ன?
ராடான் என்பது நிறமற்ற, மணமற்ற, கதிர்வீச்சு வாயுவாகும். இது காற்றில் கலந்து நீண்ட காலம் பரிணாமிப்பதால் நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது. கனடிய மண் மற்றும் கற்களில் காணப்படும் யூரேனியம் சிதைவடைந்தபோது ராடான் உருவாகிறது.
வீடுகளில் அடித்தளம், சுவர்கள், பைப் இடைவெளிகள் போன்ற தரையைத் தொடர்புகொள்வதன் மூலம் இந்த வாயு உள்ளே நுழையக் கூடும். இதனை கண்டறிய சிறப்பு டிடெக்டர்கள் தேவை, எனவே வீட்டை பரிசோதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கையின் அவசியம்
“ராடான் வாயு பிரச்சினையை சரியாக அணுகாதவரை, எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரிக்கும்,” என ஆராய்ச்சியாளர் ஆரோன் குடார்சி எச்சரிக்கிறார்.
வீட்டில் ராடான் இருந்தால், விசேஷ முறைமை மூலம் அதை வெளியேற்ற முடியும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |