சட்டப்பூர்வ புலம்பெயர்தலின் அளவையே குறைக்கவேண்டும்: கனேடியர்களில் ஒரு தரப்பு விருப்பம்
கனேடிய மக்கள் புலம்பெயர்தல் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய அவ்வப்போது கனடாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு.
அவ்வகையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், ஒரு தரப்பு கனேடியர்கள், சட்டப்பூர்வ புலம்பெயர்தலின் அளவையே குறைக்கவேண்டும் என கருதுவது தெரியவந்துள்ளது.
புலம்பெயர்தல் குறித்து கனேடிய மக்கள் என்ன கருதுகிறார்கள்?
Research Co. என்னும் ஆய்வமைப்பு, புலம்பெயர்தல் குறித்து கனேடிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வொன்றை மேற்கொண்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில், 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களில், ஏழில் ஒரு கனேடியர், சட்டப்பூர்வ புலம்பெயர்தலின் அளவையே குறைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
35 முதல் 54 வயதுடையவர்களில் 40 சதவிகிதம் பேரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில், 18 முதல் 34 வயதுடையவர்களில் 30 சதவிகிதத்தினர் சட்டப்பூர்வ புலம்பெயர்தலின் அளவை குறைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.
புலம்பெயர்தல் நாட்டின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்னும் கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
43 சதவிகித கனேடியர்கள் புலம்பெயர்தல் நாட்டின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், 39 சதவிகித கனேடியர்கள் புலம்பெயர்தல் நாட்டின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல, புலம்பெயர்தல் தொடர்பில் மக்கள் என்ன கருத்துக்கள் கொண்டுள்ளார்கள் என்பது, அவர்கள் சார்ந்த கட்சி, அவர்கள் வாழும் மாகாணம், அவர்களுடைய வயது, அவர்கள் சார்ந்த பூர்வீகம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |